Site icon அநேகன்

போலீஸ் படையில் மீண்டும் லஞ்ச ஊழலா?

கோலாலம்பூர், ஜூலை 24-
அரசு மலேசிய போலீஸ் படையில் லஞ்ச ஊழல் சம்பவங்கள் ஏற்படுவதை அதன் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் மீண்டும் ஒப்புக் கொண்டுள்ளார். இம்மாதத்தில் இவர் தெரிவித்த 2ஆவது ஒப்புதல் இதுவாகும்.

இப்போது மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்துடன் (எம்ஏசிசி) இணைந்து லஞ்ச ஊழலிலிருந்து விடுபடுவோம் என்ற உறுதிமொழியை எடுக்க அரசு மலேசிய போலீஸ் படை முடிவு செய்துள்ளது.

போலீஸ் படையிலும் லஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் இருக்கவே செய்கின்றனர். அதை உடனடியாக நிறுத்துவதோடு இது தொடர்ந்து நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகத்தான் உறுதிமொழி எடுத்தல் உட்பட இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் பயிற்சி மையத்தில் எம்ஏசிசி ஆணையர் டத்தோ ஸுல்கிப்ளி அகமட்டுடன் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் காலிட் குறிப்பிட்டார்.

போலீஸ் படையினரிடையே லஞ்ச ஊழல் சம்பவங்களை சூழியம் விகிதத்திற்குக் கொண்டு வருவதை உறுதி செய்வதில் அரசு மலேசிய போலீஸ் படை மிகவும் உறுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.

Exit mobile version