லண்டன், ஜன. 8-
உலகின் 45ஆவது ஸ்குவாஷ் வீரங்கனையான சிவசங்கரி, பிரிட்டீஸ் பொது ஸ்குவாஷ் போட்டியின் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்தார்.
ஜப்பானின் ஷாதொமி வதனேப்பை 12-10, 11-7, 11-9 என்ற நேர் செட்களில் அவர் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியை பதிவு செய்ய அவருக்கு 33 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
30 நிமிடங்களில் வெற்றி பெற்றது தமக்கு மிகுந்து மகிழ்ச்சி அளிப்பதாக சிவசங்கரி குறிப்பிட்டார். இரண்டாவது முறை 19வயதிற்குட்பட்ட பிரிட்டீஸ் பொது ஸ்குவாஷ் போட்டியின் வெற்றியாளர் பட்டத்தை மலேசியா வென்றுள்ளது. முன்னதாக 2009ஆம் ஆண்டு லோ வீ வேம் இக்கிண்ணத்தை கைப்பற்றியிருந்தார்.
முன்னதாக 13 வயதிற்குட்ட பிரிவில் செவீத்ரா கிண்ணத்தை வென்றார். அதோடு பிரிட்டிஸ் பொது ஸ்குவாஷ் போட்டியில் மலேசியா 4 பிரிவுகளில் கிண்ணத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

