கோலாலம்பூர், ஜன.10 –
மலேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் டோல் கட்டணம் இதர நாடுகளைக் காட்டிலும் மிகவும் குறைந்தது என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைகளை பராமரிக்க, டோல் கட்டணம் அவசியம் வசூலிக்கப்பட வேண்டும் என பிரிபூமி பெர்சத்து கட்சியின் தலைவருமான மகாதீர் தெரிவித்தார். 1980 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பினாங்கு பாலத்தில் இரு வழி பயணத்திற்கு 7 ரிங்கிட் மட்டுமே டோல் வசூலிக்கப்படுகிறது. இன்று வரை அந்த கட்டணத்தில் மாற்றமில்லை.
ஆனால் , ஜப்பானில் கட்டப்பட்ட பாலம் ஒன்றில், இரு வழி பயணத்துக்கு 500 ரிங்கிட் வரையில் கட்டணம் வசூலிக்கப்படுவதை மகாதீர் சுட்டி காட்டினார்.
உலகில் உள்ள இதர நாடுகளுடன் மலேசியாவின் டோல் கட்டணத்தை மக்கள் ஒப்பிட வேண்டும் என டாக்டர் மகாதீர் தெரிவித்தார். 1981 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரையில் தாம் பிரதமராக இருந்தபோது டோல் கட்டண உயர்வை தடுக்க , நிலங்களை கொள்முதல் செய்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்களுக்கு இலகுவான முறையில் கடனை வழங்கியதாக மகாதீர் கூறினார்.

