Site icon அநேகன்

பிரான்ஸ் லீக் கிண்ணம் – அரையிறுதி சுற்றில் பாரிஸ் செயின் ஜெர்மைன்!

பாரிஸ், ஜன.11 –

பிரான்ஸ் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு பாரிஸ் செயின் ஜெர்மைன் தகுதி பெற்றுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பாரிஸ் செயின் ஜெர்மைன் 2-0 என்ற கோல்களில் அமியேன்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் உருகுவே முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர் எடின்சன் கவானி களமிறங்கவில்லை. புத்தாண்டு, கிறிஸ்மஸ் தினங்களை முன்னிட்டு கவானி, உருகுவேக்கு திரும்பியதால் அவர் இந்த ஆட்டத்தில் களமிறங்கவில்லை. 34 ஆவது நிமிடத்தில் அமியேன்ஸ் கோல் காவலர் ரெகிஸ் குர்டனருக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

53 ஆவது நிமிடத்தில் பாரிஸ் செயின் ஜெர்மைன் அணியின் முதல் கோலை நெய்மார் போட்டார். 78 ஆவது நிமிடத்தில் அட்ரியன் ரபியோட் போட்ட கோல், பாரிஸ் செயின் ஜெர்மைன் அணியின் வெற்றியை உறுதிச் செய்தது.

Exit mobile version