பெங்ளூரை சேர்ந்த தமிழ் பெண் காயத்ரி. ‘ஏன் இப்படி மயக்கினாய்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் விஜய் சேதுபதியுடன் `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை காயத்ரி. விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து அவர் நடித்துள்ள `புரியாத புதிர்’ திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில், காயத்ரி `உலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கவுதம் மேனின் உதவி இயக்குநர் செந்தில் வீராசாமி இயக்க உள்ள இப்படத்தை, கவுதம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒண்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மூலம் தயாரிக்கிறார்.
