கோலாலம்பூர், ஜன.11-
ம.இ.கா. தலைமையகம் மற்றும் ம.இ.கா. கூட்டரசு பிரதேச தொடர்புக் குழுவின் ஏற்பாட்டில் 2018ஆம் ஆண்டிற்கான பொங்கல் விழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் விழா அக்கட்சியின் தேசியத் தலைவரும் மலேசிய சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தின் தலைமையில் வருகின்ற 15.1.2018 திங்கள்கிழமை, மாலை மணி 6.00க்கு ம.இ.கா. கட்டட வளாகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளராக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சரும் ம.இ.கா. கூட்டரசு பிரதேச தொடர்புக் குழுவின் தலைவரும் நாம் பேரியக்கத்தின் தலைவருமான டத்தோ எம்.சரவணனும் கலந்துக்கொள்ளவிருப்பதாக ம.இ.கா. கூட்டரசு பிரதேச தொடர்புக் குழுவின் செயலாளர் டத்தோ சை.இராஜா தமது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்தார்.
உழைக்கும் மக்களின் இதய தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படவிருக்கும் இவ்விழாவில், ம.இ.கா.வின் மத்திய செயலவை உறுப்பினர்கள், தொகுதி மற்றும் கிளைத்தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு சார்பற்ற இயக்கத்தினர்கள், பொதுமக்கள் முதலானோர் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுமென டத்தோ இராஜா கேட்டுக்கொண்டார்.

