ஜோர்ஜ்டவூன், ஜூலை.25-
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மீது, கெராக்கான் கட்சி ஜோர்ஜ்டவூன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. ஸ்ரீ தஞ்சோங் பினாங்கில் நிலம் விற்கப்பட்டது தொடர்பில் கெராக்கான் கட்சி மீது அவதூறு கருத்துகளை வெளியிட்டதன் காரணமாக அந்த கட்சி குவான் எங் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
வாதியான கெராக்கான் கட்சி சார்பில் அதன் தலைமைச் செயலாளர் டத்தோ லியாங் தெக் மேங் வழக்கைத் தொடுத்தார்.
கெராக்கான் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குவான் எங் அவதூறு கருத்துகளை வெளியிட்டதாகவும் அந்த கருத்துகள் டிஏபி ஊடங்களின் வெளிவந்திருப்பதாகவும் லியாங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதிவாதியான லிம் குவான் எங் இந்த அவதூறுகளை தொடர்ந்து கூறி வந்ததாக கெராக்கான் கட்சியின் வழக்கறிஞர் டத்தோ பல்ஜிட் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் பொது சேதங்கள், நிலைமையை மேலும் மோசமாக்கியது மற்றும் அதற்கான சேதாரங்கள், ஊடகங்களில் பொது மன்னிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை வாதி தரப்பு கோருகிறது.
