நியூயார்க், ஜூலை 27-
அமெரிக்காவில் நடக்கும் சாம்பியன் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்தின் மன்செஸ்டர் சிட்டி அணியிடம் 4 என்ற கோல் எண்ணிக்கையில் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை வென்ற ஸ்பெய்னின் ரியல் மாட்ரிட் படுதோல்வி கண்டது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாகியோ ராமோஸ் ஆகியோர் இன்றி களமிறங்கியுள்ள ரியல் மாட்ரிட் முதல் ஆட்டத்தில் பெனால்டியின் மூலம் மன்செஸ்டர் யுனைடெட் அணியிடம் தோல்வி கண்டது.
இந்நிலையில் மலேசிய நேரப்படி இன்று காலை (27 நடந்த ஆட்டத்தில் அவ்வணி மன்செஸ்டர் சிட்டியை சந்தித்து விளையாடியது. முற்பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் புகுத்த கடுமையாகப் போராடின. ஆனால் கிடைத்த வாய்ப்பை இரண்டு அணிகளும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
ஆனால் பிற்பாதி ஆட்டம் தொடங்கி 52ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் சிட்டி அணிக்கான முதல் கோலை நிக்லெஸ் ஹொத்தமெண்டி புகுத்தினார். அடுத்த கோலை ரெஹெம் ஸ்டெலிங் அடித்தார்.67ஆவது நிமிடத்தில் ஜோன் ஸ்டோன் சிட்டி அணிக்கான 3ஆவது கோலை புகுத்திய நிலையில் பிரமின் டையிஸ் 4ஆவது கோலை 82ஆவது நிமிடத்தில் அடித்தார். இதனால் 4 என்ற கோல் எண்ணிக்கையில் மன்செஸ்டர் சிட்டி முன்னிலை பெற்றது. ரியல் மாட்ரிட் அணிக்கான ஒரே ஆறுதல் கோலை 90ஆவது நிமிடத்தில் ஒஸ்கெர் ரொட்ரிகெஸ் அடித்தார். இதனால் ஆட்டம் 4 என்ற கோல் எண்ணிக்கையில் ரியல் மாட்ரிட் அணிக்கு பாதகமாக முடிந்தது.
