Site icon அநேகன்

2010 முதல் 22,234 பாலியல் கொடுமைச் சம்பவங்கள்!

கோலாலம்பூர், ஜூலை 27-

நாட்டில் கடந்த 2010 தொடங்கி 2017 மே மாதம் வரை 22,234 பாலியல் கொடுமைச் சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 13,272 சம்பவங்கள் கற்பழிப்புச் சம்பவங்களாகும் என்று மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர், டத்தோஸ்ரீ ரொஹானி அப்துல் காரிம் தெரிவித்தார்.

இதில் தேசிய போலீஸ் படை வெளியிட்டப் புள்ளி விவரத்தின்படி 2,089 சம்பவங்களுடன் ஜோகூர் மாநிலம் மிக அதிக எண்ணிக்கையைப் பதிவுச் செய்துள்ளது.  இந்த பாலியல் கொடுமைச் சம்பவங்களில் திருமணமாகாத ஆண் உடலுறவுக் கொள்ளுதல் 1796 சம்பவங்கள், இயற்கைக்கு மாறானப் பாலியல் உறவு (1152), இழிவுப்படுத்துதல் (6014) சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன

இதில் உடல் ரீதியிலான கொடுமைச் சம்பவங்களைப் பொறுத்தவரை ஆண்களால் ப்ந்ண்கள் கொடுமைப்படுத்தப்பட்ட 2,244 சம்பவங்கள் இந்தக் காலக் கட்டத்தில் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக ரொஹானி மேலும் கூறினார்.

Exit mobile version