Site icon அநேகன்

சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கிண்ணம் – அர்ஜெண்டினாவை சாய்த்தது மலேசியா !

ஈப்போ, மார்ச் 7-
2018 சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கிண்ணப் போட்டியில் மலேசியா 2 – 1 என்ற கோல்களில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அர்ஜெண்டினாவை வீழ்த்தியது.
ஆக கடைசியாக 1992 ஆம் ஆண்டில் பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மலேசிய ஹாக்கி அணி , 6 – 4 என்ற கோல்களில் அர்ஜெண்டினாவை தோற்கடித்திருந்தது. தற்போது 26 ஆண்டுகளுக்குப் பின்னர் மலேசியா மீண்டும் அதிரடி படைத்துள்ளது. அஸ்லான் ஷா அரங்கில் நடந்த ஆட்டத்தில் மலேசியாவின் இரண்டு கோல்களையும் முஹமட் நஜ்மி பரிசால் ஜஸ்லான், தெங்கு அஹ்மாட் தஜூடின் தெங்கு அப்துல் ஜாலில் போட்டனர்.
அர்ஜெண்டினாவின் ஒரே கோலை 32 ஆவது நிமிடத்தில் டியாகோ பாஸ் போட்டார். இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா மேற்கொண்ட அனைத்து தாக்குதல்களையும் மலேசிய ஹாக்கி அணியின் தற்காப்பு அரண் முறியடித்தது. குறிப்பாக கோல் காவலர் ஹபீசுடின் ஒத்மான் சிறப்பாக செயல்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மலேசியா ஆறு புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
Exit mobile version