Site icon அநேகன்

படப்பிடிப்பிற்கு புறப்பட்டார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

மும்பை, மார்ச் 9-

அம்மா இல்லாத கவலையுடன் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி படப்பிடிப்புக்கு புறப்பட்டுவிட்டார். தயாரிப்பாளர்களுக்கு தம்மால் எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்ற அவரது நடவடிக்கையை பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள்.

ஸ்ரீதேவி தனது மகள் ஜான்வியை நடிகையாக்கிப் பார்க்க விரும்பினார். ஜான்வி குழந்தையாக இருந்தபோது படத்தில் டாக்டராக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். அதை கேட்ட ஸ்ரீதேவி மகளுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதை புரிந்து கொண்டு ஊக்குவித்தார் என இந்திய ஊடங்கங்கள் தொடர்ந்து கூறி வந்தன.

ஜான்வி ஹீரோயினாக அறிமுகமாகும் படம் தடக். அந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது தான் ஸ்ரீதேவி இறந்த செய்தி ஜான்விக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அப்போது துடித் துடித்துப் போனார். அம்மா இறந்த சோகத்தில் இருந்த ஜான்வி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். என்ன தான் கவலை இருந்தாலும் தைரியமாக நடிக்க வந்த ஜான்வியை பாலிவுட்காரர்கள் பாராட்டியுள்ளனர்.

பாலிவுட்டில் பெரிய ஆளாகி தனது அம்மாவை பெருமை அடையச் செய்ய வேண்டும் என்பதே ஜான்வியின் ஆசை. அதனால் தான் அதற்கான வேலையில் இறங்கிவிட்டார்.  தடக் படம் வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

மகளை பெரிய திரையில் பார்க்க ஆசைப்பட்ட ஸ்ரீதேவி தடக் ரிலீஸாகும் முன்பே இறந்துவிட்டார். தமிழில் தமது பயணத்தை தொடங்கிய ஸ்ரீதேவி, மும்பையில் அடைக்கலம் ஆனார். அதேபோல் மும்பையில் தமது கலை பயணத்தை தொடங்கும் ஜான்வி தமிழ்ப்படங்களிலும் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது.

Exit mobile version