Site icon அநேகன்

சன்சேஸ் தவறான நேரத்தில் மென்செஸ்டர் யுனைடெட்டில் இணைந்து விட்டார்- மொரின்ஹோ!

மென்செஸ்டர், மார்ச்.10 –

மென்செஸ்டர் யுனைடெட் தவறான நேரத்தில் அர்செனல் அணியில் இருந்து அலெக்சிஸ் சன்சேசை ஒப்பந்தம் செய்து விட்டதாக நிர்வாகி ஜோசே மொரின்ஹோ தெரிவித்தார். அதன் காரணமாக அந்த ஆட்டக்காரரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தரத்தைப் பெற முடியவில்லை என மொரின்ஹோ கூறினார்.

குறிப்பாக குளிர் காலத்தில் ஆட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்யதாம் எப்போதும் விரும்புவதில்லை என மொரின்ஹோ தெரிவித்தார். ஆனால் சன்சேஸ் போன்ற ஆட்டக்காரரை ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது அதனை விட்டு விடவும் ஆசையில்லை. அதனால் கிடைத்த வாய்ப்பில் அவரை ஒப்பந்தம் செய்து விட்டோம்.

ஆனால் அடுத்த பருவத்தில் சன்சேஸ் நிச்சயம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக மொரின்ஹோ மேலும் கூறினார். மென்செஸ்டர் யுனைடெட் அணியின் ஆட்ட முறையை சன்சேஸ் மெல்ல அறிந்து வருவதால் நிச்சயம் முக்கிய ஆட்டக்காரராக உருவெடுப்பார் என மொரின்ஹோ தெரிவித்தார்.

சன்சேசின் வருகையால் மத்திய திடல் ஆட்டக்காரர் போல் பொக்பாவின் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.ஆனால் அந்த கருத்தில் தமக்கு உடன்பாடில்லை என மொரின்ஹோ தெரிவித்தார்.

Exit mobile version