தைப்பிங், ஜூலை 28-
தைப்பிங், துப்பாய் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சுடலை மையம் சரியான முறையில் சட்டவிதியின்படி கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் கட்டுவதில் எந்தவொரு முறைகேடுகளும் நடக்கவில்லை என்று ஆலய நிர்வாகத்தினர்கள் திட்டவட்டமாக தெரிவிப்பதாக அதன் செயலாளர் மா.மணிவண்ணன் கூறினார். பலமுறை தமிழ் நாளிதழ்களில் இச்செய்தி வெளியாகியுள்ளது. சிலர் வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி மக்களை குழப்பி தங்களையும் குழப்பிக் கொள்வதாக தனது அறிக்கையின் வாயிலாக அவர் தெரிவித்தார்.
பேராக் மாநில ம.இ.கா. மற்றும் ம.இ.கா. தை
கட்டடம் கட்டுவதற்கு ஏறக்குறைய 2 1/2 வருட காலம் ஆகியது. அதற்குள் இருக்கும் ‘‘BURNER மின்சுடலையின் நெருப்பு இயக்கும் இயந்திரம் ஏறக்குறைய 5 லட்சம் வெள்ளி ஆகும். இந்த இயந்திரம் இத்தாலியிலிருந்து தருவிக்கப்பட்டது. கட்டடத்தின் சுற்றுச்சுவர் தண்ணீர் குழாய், மின்சார கேபிள் மற்றும் இதர வேலைகளுக்கு மீதம் உள்ள பணத்தை கொண்டு செலவு செய்தனர்.
அதே சமயத்தில் அரசு இலாகா அங்கீகாரம் வழங்கியுள்ளது. தைப்பிங் நகராண்மைக் கழகம் மற்றும் பேராக் நில அலுவலகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அதே சமயத்தில் அனைத்து மயான கதவுகளும் பூட்டியே இருக்கும். தேவைப்படும் போது மட்டும் திறக்கப்படும். ஆலய கணக்கை இடுகாட்டிலா காண்பிப்பார்கள்?
அதே சமயத்தில் மாட்டுக் கொட்டகை போல் உள்ளது என்று கூறியுள்ளனர். இவர்கள் கண் மருத்துவரை பார்ப்பது நல்லது. இதனால் யாரும் அதிர்ச்சிக்குள்ளாக வேண்டாம். மேலும் தேவையில்லாத அறிக்கைகளை வெளியிட்ட நபர்கள் மீது கூடிய விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்து தேவாலய சபா ஏறக்குறைய 150 ஆண்டு வரலாறு கொண்டது. எப்படி பராமரிப்பதென்று எங்களுக்குத் தெரியும். அதே சமயத்தில் தைப்பிங் ம.இ.கா. தொகுதித் தலைவர் மா.இராஜசிங்கத்தின் முயற்சியில்தான் இந்த மின்சுடலை கட்டுமான பணி சிறப்பாக நடைபெற்றது என்று நிர்வாகம் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
