Site icon அநேகன்

ஓவியா ஏமாற்றப்படுகிறாரா, கண் கலங்கிய ஆரவ்- டெலிட் செய்தது ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பு ஆகிவருகின்றது. இந்நிலையில் ஓவியா, ஆரவ்வை காதலிப்பது போல் காட்டி வருகின்றனர். அப்படியிருக்க பிக்பாஸ் பகுதியில் சினேகன், சக்தியும் ஓவியா, ஆரவ் காதல் குறித்து பேசினார்கள். ஆனால், அந்த காட்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படவில்லை.

ஆனால், விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் வந்தது, இதில் ‘ஓவியா ஒருவரின் அன்பிற்காக மிகவும் ஏங்குகிறாள். அந்த அன்பு ஆரவ்விடம் கிடைக்கின்றது, ஆரம்பத்தில் ஓவியா தான் ஆரவ்வை ஏமாற்றுவாள் என்று நினைத்தேன்.

தற்போது ஓவியா ஏமாற்றப்பட்டு விடுவாளோ என்று பயமாக உள்ளது, இந்த விஷயத்தை ஆரவ்விடம் சொன்னேன். அவனும் கண் கலங்கினான், ஓவியா தற்போது கொஞ்சம் மாறி வருகிறாள் என சினேகன் பேசினார், இந்த காட்சி நேற்று முந்தைய பிக்பாஸில் ஒளிப்பரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version