Site icon அநேகன்

ஹீரோயினாகிறார் பிக்பாஸ் ஜூலி!

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமாகி, தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் ஜூலி. இந்த நிகழ்ச்சி மூலம் அவர் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டதால் அவருக்கு சினிமா வாய்ப்பு வந்துள்ளது.

பல படங்களில் சிறிய சிறிய காமெடி கதாபாத்திரங்களில் நடித்த கூல் சுரேஷ் தற்போது ஜூலியை ஹீரோயினாக வைத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜூலி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு இந்த படம் துவங்கும் என அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version