Site icon அநேகன்

ஜ.செ.கவின் போலி வாக்குறுதிகளுக்கு சீன வாக்காளர்கள் பலியாக கூடாது!

மலாக்கா, ஜூலை 29 –
12 மற்றும் 13ஆவது பொதுத் தேர்தல்களில் ஜசெக பலவேறு பொய்யான வாக்குறுதிகளைத் தந்து சீன சமூகத்தை ஏமாற்றியிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இனிமேலும் ஜ.செ.கவின் அம்மாதிரியான பொய் வாக்குறுதிகளை நம்பி சீன சமூகம் பலிகடா ஆகக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.
பினாங்கில் இரண்டு தவணைகளாக ஆட்சி செய்யும் ஜ.செ.க அங்கு மக்களின் வெறுப்பைத் தேடிக் கொண்டுள்ளது. குறிப்பாக, அம்மாநில வளர்ச்சிக்கு அக்கட்சி எதுவுமே செய்யவில்லை.
அம்னோ உறுப்பினர்கள் கட்சிப் பதவிகளுக்கு சண்டையிட்டுக் கொள்ளாமல், 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டுமென மலாக்கா, பண்டார் ஹிலிரில் கோத்தா மலாக்கா அம்னோ தொகுதி பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரயாற்றும் போது டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமீடி மேற்கண்டவாறு கூறினார்.

Exit mobile version