Site icon அநேகன்

சிலாங்கூர் மாநில நம்பிக்கைக் கூட்டணியின் தலைவரானார் அஸ்மின் அலி!

 

கோலாலம்பூர், ஜூலை 29-
வருகின்ற 14ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு நம்பிக்கைக் கூட்டணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்றாக நம்பிக்கைக் கூட்டணியின் சிலாங்கூர் மாநில தலைவராக மாநில மந்திரி பெசாரும் பி.கே.ஆரின் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கு சிலாங்கூர் மாநிலம் தயார் நிலையில் உள்ளதாக பி.கே.ஆர்., ஜசெக, அமானா, பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட ஓர் அறிக்கையில் சிலாங்கூர் மாநிலத்தின் தலைமைத்துவ அணியை அறிவித்தனர்.

இன்ஜினியர் இர்ஹாம் ஹாஷிம், டோனி புவா, அப்துல் ரஷிஸ் அசாரி ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் செயலாளராகவும், சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் ஹன்னா யியோ பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஸராய்டா கமாருடின், சாரி சுங்கிப், கோபிந்த் சிங் டியோ, டாக்டர் சுக்கிமான் சர்மானி ஆகியோர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Exit mobile version