நியூயார்க், ஜூலை 30-
உலகின் முன்னணி கால்பந்து அணிகள் சந்தித்த உலகளாவிய வெற்றியாளர் கிண்ணத்தை ஸ்பெயினின் பார்சிலோனா அணி வென்றது. நேற்று காலை நடந்த ஆட்டத்தில் அவ்வணி சக நாட்டு அணியான ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அக்கிண்ணத்தை கைப்பற்றியது.
ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனா முழு ஆட்டத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் 4ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கான முதல் கோலை லியனொல் மெஸ்சீ புகுத்தினார். அடுத்த 3ஆவது நிமிடத்தில் அதாவது 7ஆவது நிமிடத்தில் இவென் ரெகிதிச் பார்சிலோனா அணிக்கான கோலை புகுத்தினார்.
இதனால் 2 என்ற கோல் எண்ணிக்கையில் பார்சிலோனா முன்னிலை பெற்றது. அதன் பின்னர் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தை 12 முறை வென்ற ரியல் மாட்ரிட் ஆட்டத்தை தன்வசம் கொண்டு வந்தது. பார்சிலோனாவின் தற்காப்பு பகுதிக்குள் நுழைந்து சரமாரியான தாக்குதல்களை முன்னெடுத்த ரியல் மாட்ரிட் இறுதியில் 14ஆவது நிமிடத்தில் மொத்தேயோ கோவஷெச் மூலம் முதல் கோலை புகுத்தியது.
36ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கான 2ஆவது கோலை மார்க்கோ ஹெசன்சியோ அடித்தார். இதனால் முற்பாதி ஆட்டம் 2 என்ற கோல் எண்ணிக்கையில் முடிவடைந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் பார்சிலோனா சிறந்த ஆட்டத்தை வெ
அவ்வணியின் தாக்குதல் ஆட்டக்காரர்களை சமாளிக்க ரியல் மாட்ரிட் போராடிய நேரத்தில் தற்காப்பு ஆட்டக்காரரான ஜேராட் பீகே 50ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கான 3ஆவது கோலை அடித்தார். அதன் பின்னர் ஆட்டத்தை சமப்படுத்த ரியல் மாட்ரிட் கடுமையாகப் போராடிய நிலையில் அவ்வணியின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இதனால் 3 என்ற கோல் எண்ணிக்கையில் பார்சிலோனா வெற்றி பெற்றது. உலகளாவிய வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் 3 ஆட்டங்களில், பார்சிலோனா, 2 என்ற கோல் எண்ணிக்கையில் ஜுவண்டெஸையும், 1 என்ற கோல் எண்ணிக்கையில் மன்செஸ்டர் யுனைடெட் அணியையும் வீழ்த்தியிருந்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து கிண்ணத்தையும் வென்றது.
