கோலாலம்பூர், ஏப்.2-
பிரிம் தொகைக்கு விண்ணப்பித்து இன்னும் கிடைக்காதவர்கள் இன்று தொடங்கி வரும் மே மாதம் 31ஆம் தேதி வரையில் மேல் முறையீடு செய்யலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று தனது டுவீட்டர் பக்கத்திலும் முகநூல் பக்கத்திலும் பதிவிட்டிருக்கும் அவர், பிரிம் தொகை கிடைக்காத மலேசியர்கள் இந்த மேல் முறையீட்டை அருகிலுள்ள உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் கிளை அலுவலகங்களிலும் கொடுக்கலாம் என அவர் சொன்னார்.
பிரிம் தொடர்பான மேல் விவரங்களுக்கு http://ebrim.hasil.gov.my என்ற இணையத் தளத்திற்குச் சென்று தங்களின் நிலையைச் சரிபார்த்துக் கொள்வதோடு மேல் விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம் என நிதியமைச்சருமாகிய பிரதமர் நஜீப் கூறினார்.

