லண்டன், ஜூலை 31-
செல்சியின் மத்திய திடல் ஆட்டக்காரர் , மென்செஸ்டர் யுனைடெட்டில் இணையவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
28 வயதுடைய மாத்திச்சை வாங்க மென்செஸ்டர் யுனைடெட் 4 கோடி ஈரோ டாலரை வழங்கவுள்ளதாக பிரிட்டனின் டெய்லி மெயில் செய்தி
எனினும் மாத்திச்சை மென்செஸ்டர் யுனைடெட்டுக்கு விட்டுத்தர செல்சி இணங்கவில்லை. மாறாக மாத்திச் இத்தாலியின் ஏ.சி மிலானில் விற்க செல்சி முடிவு செய்தது. இருப்பினும் மென்செஸ்டர் யுனைடெட்டில் முன்னாள் நிர்வாகி ஜோசே மொரின்ஹோவுடன் இணைய மாத்திச் உறுதியாக இருந்ததை அடுத்த அந்த ஆட்டக்காரரை விட்டுக் கொடுக்க செல்சி சம்மதம் தெரிவித்துள்ளது.
மாத்திச் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்புடனான மருத்துவ சோதனையில் தேர்ச்சிப் பெற்றுள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. மென்செஸ்டர் யுனைடெட் சட்டை ஒன்றை அணிந்திருப்பதைப் போல் மாத்திச் வெளியிட்டுள்ள படம் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
