Site icon அநேகன்

ஹங்கேரி கிரான்ட் பிரிக்ஸ்: செபஸ்டியன் வெட்டல் வென்றார்

புடாபெஸ்ட், ஜூலை 31-
பார்மூலா ஓன் கார்பந்தயப் போட்டிகளின் வரிசையில் புடாபெஸ்டில் நடைபெற்ற போட்டியில் ஃபெராரி குழுவின் செபஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகுந்த பரபரப்புடன் நடைபெற்ற இப்போட்டியில் செபஸ்டியன் வெட்டல் முதலிடத்தைப் பிடித்த வேளையில் சக ஓட்டுநரான கிமி ரெய்கோனேன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

மெர்சிடிஸ் குழுவின் வல்டெரி போட்டாஸ் மூன்றாவது இடத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம் ஓட்டுநருக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ள வெட்டல், இரண்டாவது இடத்தில் இருக்கும் லுவிஸ் ஹமில்டனுடனான புள்ளி வேறுபாட்டை 12 ஆக அதிகரித்துள்ளார். 50 ஆவது முறையாக ஃபெராரி குழுவில் களமிறங்கிய வெட்டல் போட்டி தொடங்கியது முதலே முதலிடத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார்.

மொனாக்கொ கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்றப் பின்னர் கடந்த ஐந்து போட்டிகளில் வெட்டல் வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

மூன்றாவது இடத்தில் இருந்த லுவிஸ் ஹமில்டன் இறுதியில் தனது இடத்தை வல்டேரி போட்டாசுக்கு விட்டு கொடுத்தார். 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு , ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் முதல் முறையாக ஃபெராரி முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. மூன்று வார ஓய்வுக்குப் பின்னர் 12 ஆவது சுற்றுப் போட்டி பெல்ஜியமில் நடைபெறவுள்ளது.

Exit mobile version