Site icon அநேகன்

2017 உலகத் திடல் தடப் போட்டியின் புதிய சாதனை

லண்டன் , ஜூலை 31-

வருகின்ற வெள்ளிக்கிழமை லண்டனில் தொடங்க இருக்கும் உலக திடல் தடப் போட்டி, அதிக டிக்கெட்டுக்கள் விற்பனை செய்தததில் சாதனை படைக்க இருக்கிறது.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை இங்கிலாந்தின் லண்டன் நகரில் உலகத் திடல் தடப் போட்டி நடக்க இருக்கிறது. இந்த தொடரில் உலகளவில் உள்ள முன்னணி தடகள வீரர்கள் – வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்கிறார். இதுதான் அவருடைய கடைசி ஓட்டமாகும். இந்தப் போட்டியுடன் உசைன் போல்ட் ஓய்வு பெறுகிறார்.

இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக ரசிகர்கள் டிக்கெட்டுக்களை முன்பதி செய்து வருகின்றனர். தற்போது வரை 6 லட்சத்து 60 ஆயிரம் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உலகத் திடல் தடப் போட்டியில் அதிக டிக்கெட்டுக்கள் விற்பனை ஆகியது இதுதான் முதன்முறை.

இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டில் பெர்லின் நகரில் நடைபெற்ற போட்டியைப் பார்ப்பதற்காக 4 லட்சத்து 17 ஆயிரத்து 156 டிக்கெட்டுக்கள் விற்பனை ஆனதே சாதனையாக இருந்தது. இந்த சாதனை முறியடிக்கப்பட இருக்கிறது.

Exit mobile version