Site icon அநேகன்

என் படத்தில் ஓவியாவை கமிட் செய்ய ரசிகர்கள் கோரிக்கை

சினிமாவில் ஓவியா என்றால் ஏதோ ஒரு சில பேருக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் BiggBossயில் கலந்து கொண்ட பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களும் தற்போது அவர் யார், என்னென்ன படங்கள் நடித்திருக்கிறார் என்ற முழு விவரத்தையும் தெரிந்து கொண்டனர்.

தற்போது ஓவியாவை தங்களது படங்களில் கமிட் செய்ய பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்படம் இயக்கிய சி.எஸ். அமுதனிடம் ரசிகர்கள் அவருடைய அடுத்த படத்தில் ஓவியாவை கமிட் செய்ய கோரிக்கை வைத்து வருகிறார்களாம். இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version