Site icon அநேகன்

எதிரிகளாக மாறிய ஓவியா, ஆரவ்? காயத்ரி செய்த தந்திரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோர் மட்டுமே மிக நெருக்கமாக இருக்கின்றனர். “எனக்கு இந்த வீட்டில் இருக்கும் ஒரே பிரென்ட் நீதான்” என பலமுறை ஓவியாவே கூறியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த வாரம் வெளியேறப்போவது யார் என இன்று நாமினேஷன் நடைபெற்றது. அதில் ஆரவ் ஓவியாவை நாமினேட் செய்தது பலர்க்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் ஓவியாவும் ஆரவ்வை நாமினேட் செய்தது ரசிகர்களுக்கு அதை விட அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு நெருக்கமாக இருப்பவர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என யாருக்கும் புரியவில்லை.

“ஓவியா.. ஓவியானு போய்.. வெளிய இருக்கும் உன்னோட வாழ்க்கையை விட்டுடாத. அவ உன் தோள் மேல சாய்ந்து கொண்டு சிம்பதி கிரியேட் பன்ன பாக்குறா ” என காயத்ரி ஆரவ்வுக்கு சொன்ன அறிவுரையை ஏற்று தான் ஆரவ் இப்படி செய்துள்ளார்.

Exit mobile version