Site icon அநேகன்

ஜே.டி.தி 2 உடன் மிஃபா நாளை மோதல்!

பாசீர் கூடாங் ஆக. 3-
மலேசிய பிரீமியர் லீக்கில் நாளை வெள்ளிக்கிழமை முக்கிய ஆட்டத்தில் ஜே.டி.தி 2 அணி எம்.ஐ.எஸ்.சி -மிஃபா அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது. இந்த ஆட்டம் பாசீர் கூடாங் திடலில் இரவு 9 மணியளவில் நடைபெறவுள்ளது.

ஜே.டி.தி 2 அணியுடான கடந்த ஆட்டத்தில் நமது அணி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த ஆட்டம் மிகக்கடுமையானதாக இருக்கும். நமது நிலைப்பாட்டில் எஞ்சியுள்ள 4 ஆட்டங்களில் 3 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனை மையப்படுத்தி நமது விளையாட்டாளர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என மிஃபா தலைமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பிரிமியர் லீக்க்கில் நிலைத்திருக்க கடுமையான சவாலை மிஃபா எதிர்நோக்கியுள்ளது. அத்தகைய நிலையில் சமுதாய பெருமக்கள் ஆட்டம் நடைபெறும் இடங்களில் திரண்டு நமது விளையாட்டாளர்களுக்கு உற்சாகம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

சமுதாய மக்களின் ஆதரவும், கரகோஷங்களும். விளையாட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். சுற்றுவட்டார சமுதாய மக்கள் பாசீர் கூடாங் அரங்கில் திரண்டு நமது அணிக்கு ஆதரவளிக்க வேண்டுமென மிஃபா தலைமை கேட்டுக்கொண்டது.

Exit mobile version