Site icon அநேகன்

சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா எம்ஆர்டி பாதை மேம்படுத்தப்படுகிறது

கோலாலம்பூர், ஆக.3-

எம்ஆர்டியின் 2ஆவதுப் பாதையான சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா (எஸ்எஸ்பி) பாதையை மேம்படுத்த அரசு தற்போது துரிதமாகச் செயல்பட்டு வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.

கடந்த மாதம் சுங்கை பூலோ பாதையை திறந்ததோடு தேசிய முன்னணி அரசாங்கத்தின் முயற்சிகள் முடிவடைந்து விடவில்லை. மாறாக, அரசாங்கம் தொடர்ச்சியாக மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

எஸ்எஸ்பி பாதையைத் திறந்து விடுவதன் மூலம் சுங்கை பூலோவிலிருந்து புத்ராஜெயா வரையிலான ஸ்ரீ டாமான்சாரா, கெப்போங், பத்து, ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா, ஜாலான் துன் ரசாக், கேஎல்சிசி, துன் ரசாக் பரிமாற்ற (exchange) மையம், கூச்சாய் லாமா, சுங்கை பிசி, ஸ்ரீ கெம்பாங்கான், சைபர்ஜெயா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நன்மையடைவார்கள் என்பதால் இவ்விவகாரத்தில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக தமது வலைப் பதிவில் நஜீப் குறிப்பிட்டார்.

Exit mobile version