Site icon அநேகன்

கண்கவர் நிகழ்ச்சிகளுடன் சிறந்த அதிகாரபூர்வ தொடக்க விழா 

கோலாலம்பூர், ஆக.4 –
2017 ஆம் ஆண்டுக்கான சீ விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக 29 சீ விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டுக் குழுவான மாசோக் அறிவித்துள்ளது.
இந்த தொடக்க விழா மலேசியர்கள் மட்டுமின்றி அனைவரின் மனதிலும் நீண்ட நாளைக்கு நிலைத்திருக்கும் என மாசோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ சோல்கேப்லேஸ் எம்போங் தெரிவித்துள்ளார்.
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் தொடக்க விழாவுக்கு ரசிகர்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்றவாறு பல்வேறு திருப்பங்களுடன் அதிரடி நிகழ்ச்சியாக இருக்கும் என சோல்கேப்லேஸ் கூறினார்.
எனினும் ரகசியத்தை இப்போது கூற முடியாது என சோல்கேப்லேஸ் தெரிவித்துள்ளார். அதிகாரபூர்வ தொடக்க, முடிவு விழாக்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள நிறுவனம் மலேசியர்களுக்கு மிகச் சிறந்ததை வழங்கும் என சோல்கேப்லேஸ் மேலும் தெரிவித்தார்.
2017 சீ விளையாட்டுப் போட்டிக்கான தொடக்க விழாவின் டிக்கெட்டுகள் 70 விழுக்காடு விற்றுத் தீர்ந்திருப்பதாக அவர் சொன்னார். ஆகஸ்ட் 19 ஆம் தேத் தொடங்கி 30 ஆம் தேதி வரை மலேசியா 29 ஆவது சீ விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தவுள்ளது.
Exit mobile version