கும்பகோணம், ஆக.4
நடிகர் அஜித் திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், கும்பகோணத்தைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் அவருக்குச் சிலை ஒன்றை நிறுவியுள்ளனர். ஒரு லட்சம் செலவில் உருவான இந்தச் சிலையை நடிகர் இமான் அண்ணாச்சி வியாழகிழமை (03-082017) திறந்து வைத்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இமான் அண்ணாச்சி ” அஜித்துடன் எப்போது நடிக்கப்போகிறீர்கள் என்று பலர் என்னைக் கேட்கிறார்கள். அஜித்தின் அடுத்த படத்தில் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.
அஜித்தின் அடுத்த படத்தைப் பற்றி கேட்டால்’, ’’சிவா கூட்டணியில்தான் அஜித்தின் அடுத்த படம் உருவாகப்போகிறது. சத்யஜோதி தயாரிக்கும் இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் இருக்கும் என்று தயாரிப்பு நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், இயக்குநர் பக்கமிருந்து யாரும் என்னிடம் பேசவில்லை” என்றார் இமான் அண்ணாச்சி.
அஜித் எப்போதும் ஒரு படத்தை முடித்தப் பின்னர்தான் அடுத்த படத்தை அறிவிப்பார். ஆகஸ்ட் 24 ஆம் தேதி விவேகம் வெளியாகியப் பின்னர் அஜித்தின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுத்தை சிவா இதற்கு முன்னர் அஜித் நடிப்பில் வீரம் , வேதாளம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
