Site icon அநேகன்

10 ஆவது முறையாக உலக பட்டத்தை வென்றார் மோ ஃபாரா

லண்டன், ஆக. 5 –

உலகத் திடல் போட்டியில் 10 ஆவது முறையாக உலக வெற்றியாளர் பட்டத்தை வென்று பிரிட்டனின் மோ ஃபாரா சாதனைப் படைத்துள்ளார். வெள்ளிக்கிழமை லண்டன் ஒலிம்பிக் நகரில் நடைபெற்ற 10 ஆயிரம் மீட்டர் போட்டியில் மோ ஃபாரா தங்கப் பதக்கம் வென்றார்.

34 வயதுடைய மோ ஃபாரா இரண்டு முறை கீழே தவறி விழுந்தாலும் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி பட்டத்தை கைப்பற்றினார். உகண்டாவின் ஜோஷூவா சேப்தேகேய் வெள்ளிப் பதக்கம் வென்ற வேளையில் கென்யாவின் பாவ்ல் தனூய் வெண்கலப் பதக்கம் வென்றார்.

கடந்த இரண்டு உலகத் திடல் தடப் போட்டிகளில் மோ ஃபாரா, 10 ஆயிரம், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இம்முறையும் மோ ஃபாரா அந்த சாதனையைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version