பாரிஸ், ஆக. 5 –
பிரான்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் , நடப்பு வெற்றியாளரான ஏ.எஸ் மொனாக்கோ தனது முதல் ஆட்டத்தில் வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மொனாக்கோ 3 – 2 என்ற கோல்களில் தூலூஸ் அணியை வீழ்த்தியது.
கடந்த பருவத்தில் லீக் பட்டத்தை வெல்ல மொனாக்கோ அதிரடி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதே ஆட்டத்தரத்தை மொனாக்கோ மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. தற்காப்பு பகுதியில் பலவீனமாக காணப்பட்டாலும் கடந்த பருவத்தில் 107 கோல்களைப் புகுத்திய மொனாக்கோ, ஜெமர்சன், ரடமேல் பால்கோ, காமில் கிலிக் மூலம் மூன்று கோல்களைப் போட்டது.
எனினும் சினிடின் மாக்கா, ஆன்டி டெலோர்ட் மூலம் இரண்டு கோல்களைப் போட்டு இரண்டு முறை முன்னணி வகித்தது. கோடைக் காலத்தில் மொனாக்கோ அணியில் இருந்து பெஞ்சமின் மென்டி, பெர்னார்டோ சில்வா, தியாமோ பாக்காயாக்கோ வெளியேறி இருப்பதை அடுத்து அந்த அணியில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
