சென்னை: பொது செயலர் பதவியே கேள்விக்குறியாக இருக்கும் போது, துணை பொது செயலர் பதவியே கேள்விக்குறி என நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: நியாயமான கோரிக்கைகள் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தீர்வு காணப்படும். இக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் 57 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. ஜிஎஸ்டி காரணம் காட்டி அதிக லாபம் ஈட்டினால் சட்டவிரோத செயல் ஆகும். வரிஎனக்கூறி போலியாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுச் செயலர் விவகாரம் தேர்தல் ஆணையத்திலும், கோர்ட்டிலும் உள்ளது. பொதுச் செயலர் பதவியே கேள்விக்குறியாக உள்ள போது, துணை பொதுச்செயலர் பதவி செல்லாது. ஜெயலலிதா உருவாக்கிய அரசும், எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கமும் பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது. ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும் என நினைத்து சூழ்ச்சி செய்தால் அவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது. உண்ட வீட்டுக்கு துரோகம் செய்யும் துரோகிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
