Site icon அநேகன்

பேலேவை கொண்டு வர மரின்யோ தயார்!

ஸ்கோப்யா, ஆக. 8-

     ரியல் மாட்ரிட்டின் கேரட் பேலேவை ஓல்ட் டிராபோர்ட்டிற்கு கொண்டு வர தாம் தயாராக உள்ளதாக மன்செஸ்டர் யுனைடெட்டின் நிர்வாகி ஜோசே மரின்யோ தெரிவித்துள்ளார்.

     ஐரோப்பா சூப்பர் கிண்ண ஆட்டத்தில் மன்செஸ்டர் யுனைடெட் ரியல் மாட்ரிட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த ஆட்டம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் மரின்யோ மேற்கண்டவாறு கூறினார்.

     ஆயினும், 28 வயதான அந்த விளையாட்டாளரை வாங்க முடியுமா முடியாதா என்பது ரியல் மாட்ரிட் அணியுடனான ஆட்டத்திற்கு பின்னரே முடிவெடுக்கப்படும். இந்த ஆட்டத்தில் கேரட் பேலேவை ரியல் மாட்ரிட் களமிறக்கினால் அவரை வாங்கும் எண்ணம் கைவிடப்படும். காரணம், வருகின்ற பருவத்தில் அவ்வணி மற்றும் அதன் நிர்வாகியின் திட்டத்தில் அவருக்கு வாய்ப்பு இருக்கக்கூடும்.

   ஒருவேளை, கேரட் பேலே அவ்வணியின் இப்பருவ திட்டத்தில் இடம்பெறாமல் அவ்வணியிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் அவரை வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என ஜோசே மரின்யோ தெரிவித்தார். ஆயினும், ரியல் மாட்ரிட் அணியின் நிர்வாகி ஜினேடின் ஜிடான், கேரட் பேலேவை விற்க முடியாது என்றும் அவர் தனது அணிக்கு தேவைபடும் விளையாட்டாளர் என்று மரின்யோவிற்கு பதில் அளித்துள்ளார்.

 

Exit mobile version