Site icon அநேகன்

விரைவில் மெர்சல் சிங்கிள் டிரக்

சென்னை, ஆக. 8 –

தளபதி விஜய் , அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் மெர்சல் படத்தின் சிங்கிள் டிரக் விரைவில் வெளியாக விருப்பதாக  அதன் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். மெர்சல் படத்துக்கு இசைப் புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகும் என அந்த படத்தை தயாரித்து வரும் தேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்திருந்தது. இந்நிலையில் விரைவில் மெர்சல் படத்தின் சிங்கிள் டிரக் வெளியிடப்படும் என அதன் தேனாண்டாள் பிலிம்சின் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமா ருக்மணி தெரிவித்துள்ளார்.

மெர்சல் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் அக்டோபர் 18 ஆம் தேதி தீபாவளி திருநாளுக்கு படம் வெளியாகவிருக்கிறது.

தெறி படத்துக்குப் பிறகு மீண்டும்  விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யாவும் நடித்துள்ளனர்.

Exit mobile version