Site icon அநேகன்

விவேகம் படத்துடன் ஸ்பைடர் முன்னோட்டம்

சென்னை, ஆக.8-

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் திரைப்படத்தின் முன்னோட்டம், தல அஜித்குமார் நடித்துள்ள விவேகம் திரைப்படத்துடன் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இந்த படத்தின் இரண்டாவது டீசர் நாளை வெளியிடப்படவுள்ளது.

மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது டீசர் வெளியிடப்படும் வேளையில், ஆகஸ்ட் 23 ஆம் தேதி டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலர் அஜித் நடித்துள்ள விவேகம் திரைப்படத்துடன் இணைக்கப்பட்டு அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படும் என கூறப்படுகிறது.

ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா. ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Exit mobile version