Site icon அநேகன்

நண்பர்களுடன் இனி வீடியோவைப் பகிர்வது ரொம்ப ஈஸி! யூடியூப்பின் புதிய வசதி!

பிரபலமான வீடியோ தளமான யூடியூப்பில் ஒவ்வொரு நிமிடமும் 300 மணி நேரம் அளவிலான வீடியோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் சராசரியாக 500 கோடி வீடியோக்கள் இத்தளத்தில் கண்டுகளிக்கப்படுகின்றன. ஆனால், இதுவரை வீடியோவை மற்ற அப்ளிகேஷன்கள் வழியாகத்தான் நண்பர்களுடன் பகிரும் வசதி இருந்தது. தற்போது நேரடியாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வீடியோ குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் யூடியூப்பில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் முதலே இந்த வசதியை அந்நிறுவனம் டெஸ்ட் செய்துகொண்டிருந்தது. இந்நிலையில் நேற்றிலிருந்து அந்நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் அப்ளிகேஷனில் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வீடியோவின் கீழ் உள்ள Share பட்டனை அழுத்தினால், விருப்பப்படும் யூடியூப் நண்பர்களுடன் நேரடியாக வீடியோவைப் பகிர்ந்துகொள்ள முடியும். மேலும், வீடியோ குறித்து வாட்ஸ்அப்பில் உள்ளதுபோல சாட் செய்யவும் முடியும்.

Exit mobile version