Site icon அநேகன்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 832ஆக அதிகரிப்பு

ஜகர்த்தா, செப் 30
சுலேவேசியா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.

நிலநடுக்கத்தை அடுத்து பல இடங்களில் சுனாமியும் ஏற்பட்டது. பாலு நகரில் 5 அடி உயரத்திற்கு எழும்பிய சுனாமி அலைகள் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதியை தாக்கியதால் அந்நகரமே மோசமான சூழ்நிலையை சந்தித்துள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் பலர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Exit mobile version