Site icon அநேகன்

3 ஆவது முறை எஸ்.பி.ஆர்.எம் வந்தார் ரோஸ்மா மன்சோர் !

புத்ராஜெயா, அக்.3 –

ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தில் நடந்த முறைக்கேடுகள் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மனைவி டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் இன்று மீண்டும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ( எஸ்.பி.ஆர்.எம் ) தலைமையகம் வந்தார்,

காலை 10.40 மணி அளவில் கறுப்பு நிறத்திலான பெர்டானா காரில் ரோஸ்மா வந்தார். உடன் ஒரு கைப்பையையும் ஒரு கடித உறையையும் அவர் கொண்டு வந்தார். ரோஸ்மாவுடன் அவரின் வழக்கறிஞர் டத்தோ கே. குமேரந்திரனும் உடன் இருந்தார். மூன்றாவது முறையாக ரோஸ்மா மன்சோர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்துக்கு வந்துள்ளார்.

ஆக கடைசியாக அவர் விசாரணைக்கு வந்தபோது அந்த விசாரணை 13 மணி நேரம் நீடித்தது என்பது குறிப்பிடதக்கது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு ரோஸ்மா மன்சோர் வந்திருந்த அதே நேரத்தில் அவரின் கணவர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக், சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்காக ஜாலான் துன் ரசாக்கில் உள்ள கே.பி.ஜே கோபுரத்தில் உள்ள புக்கிட் அமான் குற்றவியல்துறை அலுவலகத்துக்குச் சென்றார்.

இன்றைய விசாரணைக்குப் பின்னர் ரோஸ்மா மன்சோர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை கைது செய்யப்பட்டால், நாளை வியாழக்கிழமை ரோஸ்மா மன்சோர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version