Site icon அநேகன்

தீபாவளிக்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை

புத்ராஜெயா, அக். 4
இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட தமிழ்ப்பள்ளிகள் கூடுதல் விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் விழாக்களுக்கான விடுமுறையை எடுத்து முடித்திருந்தாலும் அப்பள்ளிகள் தீபாவளிக்காக கூடுதல் விடுமுறை எடுக்க விரும்பினால் அவர்கள் மாற்று விடுமுறைக்கு மனு செய்யலாம் என கல்வியமைச்சு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

தீபாவளிக்காக தமிழ்ப்பள்ளிகள் செய்யும் மாற்று விடுமுறைக்கான மனுக்களை மாநில கல்வி இயக்குநர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று அமைச்சு தெரிவித்தது.

கெடா, கிளந்தான், திரெங்கானு, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் தமிழ்ப்பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை நவம்பர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் நவம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளுக்கு விழாக்கால விடுமுறைகளுக்கு மனு செய்யலாம். மற்ற மாநிலங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை நவம்பர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி முடிவடைகிறது. இந்த பள்ளிகளும் நவம்பர் 8 மற்றும் 9ஆம் தேதியும் விழாக்கால விடுமுறைக்கு மனு செய்யலாம் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கூடுதல் விடுமுறைக்கான மாற்று பள்ளிக்கூட நாட்கள் அக்டோபரில் நிர்ணயிக்கப்பட வேண்டும். தீபாவளி விடுமுறை தினங்களில் பள்ளிக்கூட ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் நிலை இருக்குமானால் மாநில கல்வி துறைகள் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சு கூறியது.

Exit mobile version