Site icon அநேகன்

வைரமுத்து மீது மீண்டும் பாலியல் புகாரா?

சென்னை, அக் 9

வைரமுத்து மீது ஏற்கனவே ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்த நிலையில், கல்லூரியில் படிக்கும் இளம் பெண் ஒருவரும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இது தொடர்பில் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு திரைத்துறையில் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களை பிரபல நடிகைகள் எழுப்பி வரும் நிலையில், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஹாலிவுட்டில் துவங்கிய #MeToo எழுச்சியை தொடர்ந்து, உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்ற பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் தெரிவித்த தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர் சந்தியா மேனன் என்பவர் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வைரமுத்து தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version