கோலாலம்பூர், அக். 22-
ஹாயாசி ஹா கராத்தே அணியின் வீரர்கள் கடந்த சுக்மா போட்டியில் 5 தங்கப்பதக்கங்களை பெற்றதற்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பேரின்பத்தின் ஆலோசகர் யு. தாமோதரன் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டார்.
பேராவில் நடந்த சுக்மா போட்டியில் கூட்டரசு பிரதேசத்தை பிரதிநிதித்து கலந்து கொண்ட ஹாயாசி ஹா கராத்தே வீரர்கள் 5 தங்கப்பதக்கங்களை வென்றார்கள். அவர்களை பாராட்டும் வகையில் இந்த விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக அவ்வமைப்பின் தலைவரும் தலைமை பயிற்றுநருமான மாஸ்டர் அறிவழகன் கூறினார்.
குறிப்பாக சுக்மா போட்டியில் எஸ்.ரூபன், ஸ்ரீ குகாஷினி, ஜி, தர்ஷினி, ஜி யாசிகா ஆகியோருடன் பெண்கள் குழு பிரிவு என 5 தங்களை வென்றோம். இது மிகப் பெரிய வெற்றியாகும். இதுவரை நடந்த போட்டிகளில் அதிகபட்சமாக 4 தங்கங்களை மட்டுமே வென்றுள்ளோம். இந்த முறை தங்க பதக்கத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அறிவழகன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
வெற்றியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பாராட்டு விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இது விளையாட்டாளர்களுக்கு ஊக்கமானதாக அமையும். மேலும் பல சாதனைகளை படைக்க அவர்களுக்கு துணை புரியுமென அழிவழகன் நம்பிக்கை தெரிவித்தார். தங்கம் வென்ற வீரர்களுக்கு தலா 2000 வெள்ளி ஊக்குவிப்பு நிதியாக வழங்கப்பட்டது. பெண்கள் குழுவிற்கும் 2 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.
சுக்மா போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற விளையாட்டாளர்களுக்கு தலா 500 வெள்ளி வழங்கப்பட்டது. இதோடு இவர்களது பயணம் முடிவப்போவதில்லை. வரும் காலங்களில் இவர்கள் பல சாதனைகளை படைப்பார்கள் என அறிவழகன் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே ஹாயாசி ஹா கராத்தே அணியின் தலைசிறந்த இரண்டு வீரர்களுக்கு ஜப்பான் சென்று ஒருவார காலம் பயிற்சி பெறும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டவர் விக்னேஸ்வரி ஆறுமுகம். இவருக்கான செலவை பேரின்பம் மலேசியா ஏற்றுக் கொள்கின்றது. அதேபோல் தர்ஷினிக்கும் பயிற்சி பெற வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அவருக்கான செலவை டாயாஸ் குழுமத்தைச் சேர்ந்த டத்தோ தேவா ஏற்றுக் கொண்டார்.
இந்த பாராட்டு நிகழ்ச்சியில் டத்தோ பொன்னையா, டத்தோ சூரிய பிரகாஷ், டத்தோ தியாகு, நக்கீரன் என பல பிரபலங்களை கலந்து கொண்டார்கள்.

