Site icon அநேகன்

கிரேப் டாக்சிகளுக்கான விதிமுறை அமல்படுத்தப்படும்! அந்தோணி லொக்

சிரம்பான், அக்.22-

கிரேப் எனப்படும் டாக்சிகளுக்கான புதிய விதிமுறையை முழுமையாக அமல்படுத்த ஓராண்டு காலம் பிடிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர், அந்தோணி லொக் சியூ பூக் தெரிவித்தார்.

இந்த விதிமுறை 2017 தரைப் பொது போக்குவரத்து சட்டம், 2017 வர்த்தக வாகன உரிம வாரியச் சட்டம் ஆகியவற்றின் வாயிலாகக் கடந்த ஜூலை மாதத்தில் அரசிதழில் பதிவு செய்யப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் 1 லட்சம் கிரேப் டாக்சி ஓட்டுநர்கள் இருப்பதால் அவர்களைப் பதிவு செய்ய நீண்ட காலம் பிடிக்கும்.

இச்சேவையை நாட்டில் அனுமதித்த பின்னர் இதற்கான விதிமுறையை அரசு அமல்படுத்தி விட்டது என்பது உண்மைதான். இருந்த போதிலும் இதன் பிறகு முழுமையாக அமல்படுத்தப்பட்டதும் அது டாக்சி, மின்னியல் டாக்சிகள் ஒரே நிலையில் வைத்திருக்கும்.

இந்தப் புதிய விதிமுறை உண்மையில் மின்னியல் டாக்சி மற்றும் சாதாரண டாக்சிகளுக்கிடையே சமத்துவமான நிலையை உருவாக்கும் அதே சமயம் மின்னியல் டாக்சி ஓட்டுநர்கள் பொதுச்சேவை வாகன உரிமத்தைப் (பிஎஸ்வி) பெற்று புஸ்பாகொமில் ஆண்டுக்கு ஒருமுறை வாகனப் பரிசோதனை மேற்கொள்வதைக் கட்டாயப்படுத்துவதற்கு ஆகும் என்று நெகிரி செம்பிலான் ஜசெகவின் 18ஆவது மாநாட்டிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அந்தோணி லொக் குறிப்பிட்டார்.

இதனிடையே, மின்னியல் டாக்சி ஓட்டுநர்களுடன் போட்டித்தன்மையை எதிர்நோக்கியிருக்கும் சாதாரண டாக்சி ஓட்டுநர்களின் நிலை பற்றி அரசு கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுவதை அந்தோணி லொக் மறுத்தார்.

டாக்சி ஓட்டுநர்களுக்கு சொந்த பெர்மிட் வழங்குதல் உட்பட பல்வேறு உதவிகளை அரசு செய்து கொண்டுதான் இருக்கிறது. இதில் மின்னியல் டாக்சி ஓட்டுநர்களுக்குப் போட்டித்தன்மையாக இருக்கும் வகையில் அவர்களுக்கான விதிமுறையையும் அரசு ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இருந்த போதிலும் மின்னியல் டாக்சி சேவையைச் சட்டவிரோதமானதாக்குவதோடு அரசு அதைக் கண்டு கொள்ளக் கூடாது என்றுதான் சாதாரண டாக்சி ஓட்டுநர்கள் கேட்கின்றனர். இதில் அவர்களும் இந்தச் செயலியைப் பயன்படுத்துவதற்குத்தான் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று கிரேப்கார் சேவை தங்களின் வருமானத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக லங்காவியில் 200க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்கள் பிரதமர், துன் டாக்டர் மகாதீருடன் நடத்திய சந்திப்பு குறித்து சிரம்பான் தொகுதி எம்.பி.யுமான அந்தோணி லொக் கருத்துரைத்தார்.

Exit mobile version