Site icon அநேகன்

அம்னோவில் இருந்து வெளியேறுவதற்கு போலியான காரணங்களைச் சொல்கின்றனர்- துவான் இப்ராஹிம்!

கோலாலம்பூர், டிச.15-

அம்னோவில் இருந்து வெளியேறுவதற்காக அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொகுதித் தலைவர்களும் போலியான காரணங்களைச் சொல்கின்றனர் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார். தங்களைத் தேர்தெடுத்த வாக்காளர்களுக்காக, பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு ஆதரவு தெரிவிப்பதாக , சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது ஒன்று என துவான் இப்ராஹிம் கூறினார்.

ஆனால் இவர்களின் முடிவை மக்களே ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையால், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சுயநலத்துக்காக போலியான காரணங்களைக் கூறுகின்றனர் என குபாங் கிரியானில் செய்தியாளர்களைச் சந்தித்த துவான் இப்ராஹிம் கூறினார்.  14 ஆவது பொதுத் தேர்தலில் 54 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற, அம்னோ தற்போது 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது.

கோடிக் கணக்கான சொத்துகளைக் கொண்டிருக்கும் மிகப் பெரிய அரசியல் கட்சியான அம்னோவுக்கு இத்தகைய நிலை நேர்ந்திருக்ககூடாது என துவான் இப்ராஹிம் மேலும் தெரிவித்தார். அம்னோவுக்கு இன்னமும் பலம் இருக்கிறது. ஆனால் ஒரு நேரத்தில் அதன் தலைவர்கள் பல நெருக்கடிகளை எதிர்கொள்வதால்,  என்ன செய்வது என புரியாமல் கட்சியில் இருந்து வெளியேற முடிவு செய்வதாக அவர் மேலும் கூறினார்.

 

Exit mobile version