Site icon அநேகன்

கவலை வேண்டாம்- பிரதமர் !

கோலாலம்பூர், டிச.16-

2018 ஏ.எப்.எப் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மலேசியா , 0-  1 என்ற கோலில் வியட்நாமிடம் தோல்வி கண்டிருந்தாலும், ஹரிமாவ் மலாயா ஆட்டக்காரர்கள் மனம் தளர்ந்து விட வேண்டாம் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் கேட்டு கொண்டுள்ளார். வியட்நாமுக்கு எதிராக மலேசிய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த தோல்வியைக் கண்டு ஆட்டக்காரர்களும், பயிற்றுனரும் வருத்தம் அடைய வேண்டாம். மாறாக, இந்த தோல்வியை ஒரு அனுபவமாகக் கொண்டு தங்களின் ஆற்றலை அதிகரித்துக் கொள்ளலாம் என துன் டாக்டர் மகாதீர் கூறினார். இன்னும் கடுமையாக உழைத்தால் அடுத்தடுத்து வரும் ஆட்டங்களில் ஹரிமாவ் மலாயா வெற்றிகளைக் குவிக்க முடியும் என அவர் மேலும் சொன்னார்.

தாய்லாந்துக்கு இரண்டு நாட்கள் வருகைத் தந்திருக்கும் துன் டாக்டர் மகாதீர்,  ரங்சிட் பல்கலைகழகம் ஏற்பாடு செய்திருந்த  இரவு விருந்துபசரிப்பில் கலந்து கொண்டார். அந்த விருந்துபசரிப்புக்குப் பின்னர் , டாக்டர் மகாதீர், மலேசியப் பேராளர்களுடன் அமர்ந்து இறுதி ஆட்டத்தைக் கண்டுக்களித்தார்.

 

Exit mobile version