Site icon அநேகன்

செவ்வாய்க்கிழமை முதல் அரசு ஊழியர்களுக்கான வெ. 500 சிறப்பு நிதி

கோலாலம்பூர், டிச. 17-

1.4 மில்லியன் அரசு ஊழியர்கள் சிறப்பு நிதியான வெ. 500ஐ செவ்வாய்க்கிழமை பெறுவார்கள் என நிதியமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.

அடுத்தாண்டுக்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அடுத்த ஆண்டுக்குப் பதிலாக இவ்வாண்டே அம்மதிரியான நிதியுதவி வழங்கப்படுவது இதுவே முதன்முறை என அவர் குறிப்பிட்டார்.
அரசு ஊழியர்களுக்கு வெ. 500ம் ஓய்வு பெற்றோருக்கு வெ. 250ம் அளிக்கப்படும் என 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில் அதற்கான பட்ஜெட்டில் அது அறிவிக்கப்படாவிட்டாலும், பக்காத்தான் அரசு அதற்கான நிதியான வெ. 100 கோடியை சிக்கன நடவடிக்கை, நேர்மையான நிர்வாகம், வெளிப்படையான தன்மையின் மூலம் சேகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த உதவி நிதியானது மத்திய அரசின் நிரந்தர மற்றும் குத்தகைத் தொழிலாளர்களான 1.4 மில்லியன் பேருக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்படும்.

பள்ளிப் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு உதவுவதற்காகவே இந்நிதி ஆண்டின் இறுதியில் வழங்கப்படுவதாகவும் அரசின் ஓய்வு பெற்ற 800,000 பேருக்கு வெ. 250ம் வழங்கப்படுவதாக குவான் எங் தெரிவித்தார்.

Exit mobile version