Site icon அநேகன்

சீபில்ட் ஆலய கலவரத்தில் தாக்கப்பட்ட தீயணைப்பு வீரர் முகமட் அடிப் உயிரிழந்தார்

கோலாலம்பூர், டிச 17-

சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த வன்செயலில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாக கூறபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர் முகமட் அடிப் பின் முகமட் முகமட் காசிம் இன்றிரவு 9.40 மணியளவில் உயிரிழந்தார்.

அச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவருக்கு ஐஜேஎன் எனப்படும் தேசிய இருதய கழகத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் இன்று மரணமடைந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாக தீயணைப்பு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 27ஆம் தேதி சீபில்ட் ஆலயம் அருகே நிகழ்ந்த வன்செயலில் முகமட் அடிப் ஒரு கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. இது நாள் வரை தீவிர சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று திடீரென்று நுரையீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகள் மோசமடைந்தன. இந்நிலையில் இன்று உயிரழந்ததாக மருத்துவர்கள் உறுதிபடுத்தினர்.

Exit mobile version