கோலாலம்பூர், டிச. 18
சீபில்ட் ஆலய கலவரம் தொடர்பில் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணமுற்றதை தொடர்ந்து தீயணைப்பு மீட்புத் துறையின் நிலையங்களில் அத்துறையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று என்று மலேசிய தீயணைப்பு மீட்புத் துறை தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ஹம்டான் வாஹிப் தெரிவித்துள்ளார்.
இன்று தொடங்கி வியாழக்கிழமை வரை அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்க விடப்படும் என்று அவர் கூறினார்.
முகமட் அடிப்பின் கும்பத்தாருக்கு தீயணைப்பு மீட்புத் துறை வீரர்கள் அனைவரும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றனர் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
முகமட் அடிப்பை தாக்கியதோடு அவருக்கு மரணத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

