Site icon அநேகன்

பெம்பான் நில விவகாரத்தில் என்னை சம்பந்தப்படுத்தாதீர்! சிவநேசன் வலியுறுத்து

ஈப்போ பிப் 15-

பேராவில் தற்பொழுது சர்ச்சைக் குறிய விவகாரமாக தலைதூக்கியுள்ள பெம்பான் நிலவிவகாரத்தில் தம்மை யாரும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் கேட்டுக்கொண்டுள்ளார் .

தேசிய முன்னணி ஆட்சியின் போதே புந்தோங் சுற்றுவட்டாரத்தில் புறம் போக்கு நிலத்தில் வசித்து வந்த இந்தியர்களை மறுகுடியேற்ற பெம்பான் நிலத்திட்டம் உருவானது.

அதில் தொடக்க கட்டமாக 133 இந்தியர்களை குடியேற்றம் செய்யும் நடவடிக்கையை ம.இ.கா மேற்கொண்டது. அந்த திட்டத்தில் அவர்களை குடியேற்ற முடியாமல் போனதற்கு ம.இ.கா. தான் பொறுப்பேற்கவேண்டும் என சிவநேசன் குறிப்பிட்டார்.

ஆடசி மாற்றத்திற்கு பின்னர் இந்த விவகாரம் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை கண்காணிக்கும் பொறுப்பு புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ. சிவசுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று அந்த விவகாரம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ளன. அதில் தன்னை சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று சிவநேசன் கேட்டுக்கொண்டார் .

வியாழக்கிழமை இரவு இங்குள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற ருக்குன் தெதாங்க பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவநேசன் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ருக்குன் தெதாங்காவைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோ வீரா மாட் பாரிட் கலந்துக்கொண்டார். , நாடு தொடந்து வளர்ச்சி அடைவதற்கு சமுக ஒற்றுமை மிக அவசியமென்பதை அவர் தமதுரையில் வலியுத்தினார்.

Exit mobile version