Site icon அநேகன்

கம்போடியா சிறையில் இருந்த 47 மலேசியர்கள் விடுதலை

பொனோன் பென், பிப். 15-

கம்போடியாவில், பெந்தே மென்ஷே மாகாணத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 47 மலேசியர்கள், இன்று வெள்ளிக்கிழமை மாலையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய அரசாங்கம், கம்போடிய அரசாங்கத்துடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டிருப்பதாக அனைத்துலக அரசு சார்பற்ற நிறுவனங்களின் தலைவர், டத்தோ டாக்டர் முஸ்தாபா அமாட் மரிகான் கூறினார்.

வேலை வாங்கித் தருவதாக கும்பல் ஒன்றால் ஏமாற்றப்பட்டதால், அவர்கள் அனைவரும் அங்கு கைதுச் செய்யப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், கம்போடிய பிரதமர் ஹுன் சென் அவர்களை விடுதலைச் செய்வதற்கு அனுமதி வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கையில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக, அந்த 47 மலேசியர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக, விஸ்மா புத்ரா கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தது.

எனினும், கைது செய்யப்பட்டிருப்பவர்களில் பலர், எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை.

மாறாக, வேலை பெற்றுத் தறுவதாக கூறி அவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version