Site icon அநேகன்

செமினி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்; 4 முனைப்போட்டி

உலு லாங்காட், பிப் 16-

வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

இன்று காலை 10.30 மணியளவில் காஜாங், தாமான் செளஜானா இம்பியானிலுள்ள ஊராட்சிமன்ற மண்டபத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் முகமட் ஐமான் சைனால், தேசிய முன்னணி வேட்பாளர் சகாரியா ஹனாபி, பிஎஸ்எம் கட்சியின் வேட்பாளர் நிக் அஸிஸ் அபிக் அப்துல், சுயேட்சை வேட்பாளர் குவான் சீ ஹெங் ஆகியோர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இத்தொகுதியில்  53,257 மொத்தம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 67.7 விழுக்காட்டினர் மலாய்காரர்களும், 22.7 விழுக்காட்டினர் சீனர்களும் 13.7 விழுக்காட்டினர் இந்தியர்களாவர்.

இந்த இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணியே வெற்றி பெறும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. இதேபோன்று கேமரன்மலையில் இடைத்தேர்தலிலும் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் தேசிய முன்னணி அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் செமினி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமட் நோ மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததை தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Exit mobile version