Site icon அநேகன்

செமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு

செமினி, பிப் 16-

செமினி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்றது. இதில் தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்க மலேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வருகை புரிந்திருந்தார்.

இந்த இடைத்தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. அதில் தேசிய முன்னணிக்கும் நம்பிக்கை கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இன்று செமினியில் காலை 10.30 மணியளவில் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதில் தேசிய முன்னணி வேட்பாளர் சகாரியா ஹனாபிக்கு ஆதரவு அளிக்க டத்தோஸ்ரீ தனேந்திரன் வருகை புரிந்திருந்தார்.

அவருடன் மக்கள் சக்தி இயக்கத்தின் துணைத் தலைவர் டத்தோ வி.சரவணகுமார் வந்திருந்தார். மேலும் மக்கள் சக்தி இயக்கத்தின் உறுப்பினர்களும் உடன் வந்திருந்தனர்.

இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி நிச்சயம் வெற்றிப் பெறும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Exit mobile version